Tuesday, Sep 07th

Last update:01:25:50 AM GMT

Online Guest: எங்களிடம் 4003 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்...
நீங்கள் இருப்பது: Home இந்தியா செல்போனில் படம் எடுத்து படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார் : விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நல்லூர்க் கந்தன் தேரில் பவனி! » ...
சட்டவிரோத கடல் பயணங்களை தடுக்க கனடாவில் புதிய சட்டம்! » ...
ஆரியவதிக்கு நீதி வேண்டும்! மன்னிப்புச் சபை கோரிக்கை » ...
ஜேர்மனி வாகன விபத்தில் இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்! » ...
ஆரியவதி மீண்டும் ஆஸ்பத்திரியில்! » ...
அரசமைப்பு திருத்தத்துக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு! » ...

செல்போனில் படம் எடுத்து படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார் : விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு

செல்போனில் படம் எடுத்து படுக்கை அறை காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார் : விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு

படுக்கையறை காட்சிகளை ஆபாசமாக படம் எடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டதாக கணவர் மீது புகார் கூறிய மனைவி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். படுக்கையறை காட்சிகள் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த என்ஜினீயர் அபிநயாவுக்கும்

(வயது25), காரைக்குடியைச் சேர்ந்த என்ஜினீயர் கண்ணனுக்கும் (வயது 27) (இருவரது பெயரும் மாற்றப்பட்டு உள்ளது) காரைக்குடியில் 27-10-06 அன்று திருமணம் நடந்தது.

 

 

திருமணம் முடிந்து 2-வது நாளில் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற இடங்களுக்கு தேன்நிலவுக்கு சென்று வந்தனர். தற்போது இந்த தம்பதிக்கு 21/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் தனது கணவர் கண்ணனிடம் அபிநயா டெலிபோனில் பேசினார். அப்போது, நீங்கள் நமது படுக்கையறை காட்சிகளை இண்டர்நெட்டில் வெளியிட்டீங்களா? அந்த காட்சிகளை நான் ஆபாச இணையதளத்தில் பார்த்தேன்.

 

ஏன் இப்படி செய்தீர்கள்? என்று ஆதங்கத்துடன் கேட்டார். விவாகரத்து வழக்கு அதைக்கேட்டு கண்ணன் அதிர்ச்சியடைந்தார். ``அது நமது படங்களாக இருக்காது. நன்றாகப் பார், நான் ஒன்றும் நீ நினைக்கிற மாதிரி எதுவும் செய்யவில்லை'' என்று உறுதியாக சொன்னார். அதன்பிறகும் நம்பிக்கை வராத அபிநயா, உங்களை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கூறினார். உடனே சவுதி அரேபியாவில் இருந்து ஊருக்கு திரும்பிய கண்ணன், தனது மனைவி அபிநயாவை எப்படியெல்லாமோ சமாதானம் செய்து பார்த்தார்.

 

ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் இருவரும் பிரிந்து சென்றனர். இதற்கிடையே, விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் அபிநயா மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இணையதளத்தில் தேனிலவு காட்சி திருமணத்திற்கு பிறகு நாங்கள் 15 நாட்கள் தேனிலவுக்கு சென்றோம். தற்செயலாக நான் ஆபாச இணையதளத்தை பார்த்தபோது, நானும், எனது கணவரும் இருக்கும் படுக்கையறை காட்சிகளை அதில் பார்த்து அதிர்ந்து போனேன்.

 

நாங்கள் தனிமையில் இருந்ததை எனது கணவர் செல்போனில் படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு அவருடைய அப்பாவும் உடந்தையாக இருக்கிறார். மேலும் பல நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு என்னைப் போல பல பெண்களை ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டு குறுகிய காலத்தில் பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள். எனவே எனது கணவரை, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்.

 

அதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பராமரிக்க ரூ.20 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி கண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, கண்ணனும் பதில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

 

தன்னைப்போல் பாவித்து... சவுதி அரேபியாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது மனைவி அபிநயா திடீரென டெலிபோன் செய்து, நமது படுக்கையறை காட்சிகளை ஆபாச இணையதளத்தில் பார்த்தேன் என்றார். அதோடு தொடர்புடைய மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் நம்புவதாக இல்லை.

 

அதனால் பிரச்சினை பெரிதாகிவிடக்கூடாது என்று சென்னைக்கு திரும்பினேன். அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து பிரபல மருத்துவமனை ஒன்றில் மனைவியை சேர்த்தேன். அவரை பரிசோதித்த டாக்டர், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக `பேரனாய்டு' என்ற மனநோய் வந்துள்ளது என்றும், அதை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

 

இந்த மனநோய் பாதித்தவர்கள், ஆபாச இணையத்தளத்தை பார்த்தால் அந்த படத்தில் வரும் பெண் இருக்கும் இடத்தில் தன்னைப்போல் பாவித்து மகிழ்ச்சியடைவார்கள். அதுபோலவே படுக்கையறை காட்சிகளையும் மனைவி அபிநயா பார்த்திருக்கிறார். அவர் பார்த்ததாக கூறும் ஆபாச காட்சியில் வரும் ஆண் வேட்டி அணிந்திருக்கிறார்.

 

அந்தப் பெண் சுடிதார் போட்டிருக்கிறார். ஆனால், எனக்கு வேட்டி அணியும் பழக்கம் இல்லை. எனது மனைவி அபிநயாவிற்கும் சுடிதார் அணியும் பழக்கம் இல்லை. உருவம் மாற்றம் அதுபோல அந்த காட்சி எடுக்கப்பட்ட அறையில் படுக்கைக்கு எதிரே பெரிய கண்ணாடியுடன் பீரோ உள்ளது. அதுபோன்ற அறை எனது வீட்டில் இல்லை. நாங்கள் போய் தங்கியிருந்த ஓட்டல்களிலும் அதுபோன்ற அறை இருந்ததில்லை. எனவே, எங்களது புகைப்படங்களை யாரோ, உருவம் மாற்றும் செய்யும் `மார்பிங்' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் ஆபாச படமெடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார்கள்.

 

அந்த வேலையை நான் செய்யவில்லை. எனவே, எனது மனைவி அபிநயாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவருடன் நான் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. 6-ந் தேதிக்கு தள்ளிவைப்பு இந்த வழக்கு, முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலதிகக் ஆக்கங்கள்...