நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டிராத முன்னைய தலைமுறையை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது- சேவ் ஸ்ரீலங்கா அமைப்பு அறிக்கை
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டிராத முன்னைய தலைமுறையை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது- சேவ் ஸ்ரீலங்கா அமைப்பு அறிக்கை
இலங்கையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற விடயங்களை நிராகரிக்கின்றோம்
இலங்கையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்து சேவ் ஸ்ரீலங்கா என்ற தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களின் குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற விடயங்களை இலங்கை மக்களுடன் இணைந்து நாங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என சேவ் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட முன்னொருபோதும் இல்லாத விளைவுகள் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பின்வரும் விடயங்களை எதிர்பார்த்தார்கள்.
தேசத்தின் உயிர்வாழும் நிகழ்வுகளில் n மக்களின் மிகப்பெரிய ஆணையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் – அதாவது அவர் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோளை
எதிர்கட்சிகள்மக்களின் ஆணையை மதித்து ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் கௌரவமாக பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும்,அதன் பின்னர் அவர்கள் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குவார்கள்.
ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பார்.
ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தகுதிவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்படும்,உரிய ஆணைக்குழுக்கள் ஆலோசனை அமைப்புகளிற்கு அரசியல்கட்சி சாராத நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கடன்பேண்தன்மை அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வது அவசர நிதி போன்றவற்றிற்கான உடனடி திட்டம் நிபுணர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும்.
மே 9 ம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அதனை தூண்டியவர்கள் அவர்களது பதவிகளை கருத்தில்கொள்ளாமல் கைதுசெய்யப்படுவார்கள் இதன் மூலம் மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை இழப்பது தவிர்க்கப்படும், என எதிர்பார்த்தோம்
ஆனால் அதற்கு மாறாக பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டிராத முன்னைய தலைமுறையை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற எந்த வேண்டுகோளையும் விடுக்காமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் அவர் மக்களின் ஆணையை அவமதித்தார்.
தற்போதைய நெருக்கடிக்கு காரணமான கூட்டணியை சேர்ந்தவர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை குழுக்களிற்கும் ஆணைக்குழுக்களிற்கும் அரசியல் நியமனங்கள் இடம்பெறுகின்றன.
மே 9ம் திகதி வன்முறைகளை தூண்டிய முக்கிய நபர்கள் இன்னமும் கைதுசெய்யப்படாத அதேவேளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் துயரம் தொடர்ந்தும் தீவிரமடைகின்ற அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்தனர்.
ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் தரம் நெருக்கடியை ஏற்படுத்திய முன்னைய அரசாங்கத்திலிருந்து வித்தியாசமானதல்ல என நாங்கள் கருதுகின்றோம்,
கடந்த 20 வருடவீழ்ச்சிக்கு இந்த பிரதமரின் பல சேர்க்கைகளும் கட்சி கூட்டணிகளும் காரணமாகயிருந்துள்ளன.
தற்போதைய சேர்க்கையும் இலங்கை மக்களை ஏமாற்றும் தோல்வியடையச்செய்யும் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
ஆகவே பொதுமக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த முன்னேற்றம் குறித்த மாயை புரிந்துகொள்ளுமாறும்,புதிய உறுதிப்பாட்டுடன் மீள்இணையுமாறும் இந்த அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சரியான திசையில் இலங்கை செலுத்தப்படும் வரை அமைதியான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடருமாறும் கேட்டுக்கொள்கின்றோம் .
கருத்துக்களேதுமில்லை