திருகோணமலையில் பழைய கழிவு பொருட்களை கொண்டு பல இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் 99 ஆம் கட்டை மீரா நகர் பகுதியில் பழைய இரும்பு கழிவு பொருள்களைக் கொண்டு ஒருவர் பல இயந்திரங்களை உருவாக்கியுள்ளார்.

தம்பலகாமம் 99 ஆம் கட்டை மீரா நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.பி . அன்வர் என்பவரே இவ்வாறு பல்வேறு வகையான இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்.

சுமார் 16 வருடங்களாக இத்தொழிலை செய்து வருவதாகவும் 2009 ஆம் ஆண்டு பல சாதனைகள் பத்திரிகையில் வெளிவந்த போதும் பண வசதி இல்லாமையால் தன்னுடைய சாதனைகள் முடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனமோ எனக்கு நிதி உதவி செய்யுமாக இருந்தால் இன்னும் பல இயந்திரங்களைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் இந்த விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.