கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம்!
பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் நேற்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வரிவிதிப்பினை நீக்கவும் பொருட்களின் விலையேற்றம் மற்றும் மின்சார கட்டணம் அகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்,கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நாடளாவிய ரீதியான வேலை நிறுத்த போராட்டத்திற்கும் முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை