பல்துறை ஆளுமையுள்ள 100 பெண்களுக்கு கௌரவம்!
அபு அலா)
மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் எற்பாடு செய்யப்பட்ட பல்துறை ஆளுமையுள்ள
பெண்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கும் விழா நேற்று மாலை (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.ஷரீக் தலைமையில் இடம்பெற்ற
இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக
பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ்,
திருகோணமலை மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் (திருமதி) என்.நவநீதனா, ஓச்சிட் அழகுக்கலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
கே.சர்மிலா மற்றும் தையல் பயிற்சி ஆசிரியை (திருமதி) எம்.எஸ்.வி.நசீரா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ்,
முஸ்லிம், சிங்கள பல்துறை ஆளுமையுள்ள 100 பெண்கள் பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை