இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! அதிபர்களிடம் ஆளுநர் சாள்ஸ் வலியுறுத்து

  • இணைப்  பாடவிதான செயற்பாடுகளிலும்  மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண அதிபர்கள் சங்கத்திடம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  உத்தரவிட்டுள்ளார்.

    இதன்போது  ‘வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட ஆளுநர், இவ்விடயங்களை மாற்றியமைக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும்  மாணவர்கள் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிப்பதால் உள ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், வாழ்கையின் அடுத்த நகர்விற்கு அது இடையூறாக அமைவதாகவும்  ஆளுநர்  சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் ஆளுநரின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த வட மாகாண அதிபர்கள் சங்கம், இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

    அத்துடன் வட மாகாண கல்வி மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.