சந்தேகநபரை துரத்தி சென்று மாயமான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்!
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்தவர் ஆவார்.
கருத்துக்களேதுமில்லை