ஹரக்கட்டாவின் தொலைபேசியை பரீட்சித்தால் பொலிஸ் அதிகாரிகளின் கடமையை அறியலாம்! தலதா அத்துக்கோரள போட்டுத்தாக்கு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்பிலுள்ள ஹரக்கட்டாவின் தொலைபேசியை பரீட்சித்துப் பார்த்தால் பொலிஸ் அதிகாரிகளின் கடமை மட்டத்தை அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர –
மகந்துரே மதுஷ், அல்லது ஹரக் கட்டாவின் தொலைபேசியை எடுத்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் யாருடைய எண்கள் உள்ளன என்பதை அறிய முடியும்.
நேர்மையாக பணியாற்றும் நபர்களுக்கு இலங்கை பொலிஸில் இடமில்லை. பாதாள உலக நபர்களின் சவால்களுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின்போது போதைப்பொருள் அழிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் தற்போது என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை எனவும், போதைப்பொருள் வியாபாரிகளின் கொடுப்பனவு பட்டியலில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயர்கள் இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை