பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 9 பேர் கைது!
பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ‘மாமா’ என்று அழைக்கப்படும் பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேர் கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது 4 இளம் பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பருக தேவையான பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டை மேலும் சோதனையிட்ட போது ஐஸ் போதைப்பொருள்களை பொதி செய்ய தேவையான பொலித்தீன் பைக்கற்றுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை