ரயிலால் மோதப்படுவதை தவிர்க்க கெப்பிலிருந்து பாய்ந்தார் நபர்!
வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்த கெப் வாகனம் ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார் என வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் வெலிகந்தை – மொனராதென்ன பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது கெப் வாகன சாரதி காயமடைந்த நிலையில், சாரதியின் மனைவி தனது உயிரைக் காப்பாற்ற வாகனத்திலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில், காயமடைந்தவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என வெலிக்கந்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை