2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்குத் துப்பாக்கிகள்! வழங்க நடவடிக்கை என்கிறார் மஹிந்த அமரவீர
2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு தங்களது பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயப் பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சட்டரீதியாக 5 ஏக்கருக்கு மேலதிகமான விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு மாத்திரமே துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன விலங்குகளால் பயிர்களில் ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதால் பயிர் செய்கைகளைக் கைவிடும் நிலையில் உள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை