அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைவிரிவுரையாளர் ஹனீஸ் தெரிவு!
கே எ ஹமீட்
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் – ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை, ஹனீஸ் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் தந்தை மர்ஹூம் அஹமட் லெப்பையும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 23 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் போதும் – பெரிய பள்ளிவாசலின் தலைவராக இருந்தார்.
இதேவேளை, பெரிய பள்ளிவாசலின் புதிய கட்டட நிர்மாணத்துக்காக 100 பேரிடம் தலா ஒரு லட்சம் ரூபா நிதியை அறவிடும் திட்டத்தை இதன்போது ஆரம்பித்து வைத்த புதிய தலைவர் ஹனீஸ், அதற்கு தனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாவை முதன்முதலில் வழங்கி வைத்தார்.
கருத்துக்களேதுமில்லை