தாவடிக் கிராமத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!
யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் செயற்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியைக் கொண்டு கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணியை சிறப்பு அதிரடிப் படையினர் முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருவதுடன் தாவடி மக்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் கிராமத்திற்கு கொண்டுசென்று வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை