மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் – மீறினால் கைது!

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய்,

லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய்,

போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய்,

கோவா 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 100 ரூபாய்,

பீட்ரூட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 80 ரூபாய்,

கறிமிளகாய் 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 150 ரூபாய்,

தக்காளி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபாய்,

வெண்டைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபாய்,

வாழைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபாய்,

கத்தரிக்காய் 1 கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 100 ரூபாய்,

தேசிக்காய் மற்றும் இஞ்சியின் அதிகபட்ச மொத்த விலை 150 ரூபாய்,

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 200 ரூபாய்,

என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.