இலங்கைக்கு விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்து சீனா!
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக சீனா இன்று (சனிக்கிழமை) விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது.
மேலும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள உதவியில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியன அடங்கியுள்ளன.
நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மற்றுமொரு விமானத்தில் மேலும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க இருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்திருக்கிறது.
கருத்துக்களேதுமில்லை