பிரிட்ஜை திறந்தாலே கெட்ட நாற்றம் வருதா? இத டிப்ஸ ட்ரை பண்ணுங்க…

நம் வசதிக்காக நிறைய பொருட்கள் சமையலறையில் வந்து விட்டன. அதில் ஒன்று பிரிட்ஜ். உண்மையில் சொல்லப்போனால் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். காரணம் இப்போ எல்லாம் பெண்கள் அடிக்கடி சமைக்க வேண்டாம், அடிக்கடி காய்கறி மார்க்கெட் போகத் தேவையில்லை, அடிக்கடி பால் பாக்கெட் வாங்க போக வேண்டாம் இப்படி எல்லா விஷயத்தையும் செளகரியமாக்கி இருக்கிறது. ஆனால் ஒன்னு சொல்லுங்க, இந்த பிரிட்ஜ்ஜை நாம் ஒழுங்காக பராமரிக்கிறோமா. கண்டிப்பாக இல்லை பல வீடுகளில் பிரிட்ஜ் கதவை திறந்ததும் துர்நாற்றம் தான் வருகிறது. யாராவது வீட்டுக்கு வந்தா கூட பிரிட்ஜ் கதவை திறக்க சங்கோஜமாக இருக்கும்.நீங்களும் எவ்வளவு தான் க்ளீன் பண்ணுவீங்க. ஒரு வாரம் கழிச்சு அதே மாதிரி தான் துர்நாற்றம் அடிக்கிறது. அப்போ இதுக்கு என்ன தான் வழி என்கிறீர்களா. சில இயற்கை பொருட்களுக்கு துர்நாற்றத்தை உறிஞ்சும் தன்மை இருக்கிறது. அவைகள் உள்ளே வைக்கும் போது உங்க பிரிட்ஜ் துர்நாற்றம் போய் விடுமாம் என்கிறார்கள் வீட்டு பராமரிப்பு நிபுணர்கள். சரி வாங்க அவை எந்தெந்த பொருட்கள் மற்றும் உங்களுக்கான டிப்ஸ்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

​காரணமும் தீர்வும்

samayam tamil

நீண்ட நேரம் பவர் கட் ஏற்பட்டால் பிரிட்ஜ்ஜில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகி தண்ணீர் வடிய ஆரம்பித்து விடும். இவை அப்படியே நீங்க வைத்த காய்கறி டப்பா, பிரிட்ஜ் தட்டில் தேங்கி காய்கறிகளை சீக்கிரம் அழுகி போக வைத்து விடும். இதனால் துர்நாற்றம் வீசும். எனவே முதலில் தண்ணீரை சுத்தப்படுத்த முயலுங்கள். அதே மாதிரி அடிக்கடி ஐஸ் கட்டியை ரீமூங் செய்யுங்கள். இதற்கு பிரிட்ஜில் கொடுத்த டிஃபாரஸ்ட் பட்டனை அழுத்தலாம்.

மற்றொன்று தோசை மாவு. இது தான் இருக்கிறதிலயே அதிக துர்நாற்றத்தை வீசக் கூடியது. ஏனெனில் மாவு புளிக்கும் போது புளித்த துர்நாற்றம் அதிகமாக இருக்கும். எனவே தோசை மாவை பிரிட்ஜ்ஜில் வைக்கும் போது பாத்திரத்தில் திறந்து வைக்காதீர்கள். முடிந்த வரை தோசை மாவிற்கு என்று டப்பாக்கள் பயன்படுத்துங்கள்.

அதே மாதிரி சீஸ், சாஸ் போன்றவற்றை அலுமினிய பேப்பரில் சுற்றி வையுங்கள். ஏனெனில் பாலாடை மிகுந்த துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மீந்த உணவுகளை டப்பாக்களில் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மூடி வையுங்கள்.

​காய்கறிகள் வைக்கும்போது

samayam tamil

கறிவேப்பிலை, கீரைகள் மற்றும் கொத்தமல்லி தழைகளை அப்படியே போடாதீர்கள். இவைகள் சீக்கிரமாக அழுகி வாசனை ஏற்படுத்தும். இதை க்ளீன் செய்வதும் கஷ்டம். எனவே இலைகளை உருவி ஒரு கவரில் போட்டோ அல்லது டப்பாக்களில் போட்டோ பயன்படுத்தலாம்

உடைத்த தேங்காயையும் அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்து அழுக ஆரம்பித்து துர்நாற்றம் வீசும். எனவே தேங்காயை ஒரு கவரில் போட்டு வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்

இஞ்சியை கடையில் இருந்து வாங்கிய உடனே மண்ணுடன் பிரிட்ஜ்யில் வைக்காதீர்கள். அதை நன்றாக கழுவி லேசாக உலர வைத்து பிறகு பிரிட்ஜ்யில் டப்பாக்களை மூடாமல் காற்றோட்டமாக வையுங்கள். மூடினால் சீக்கிரமே பூஞ்சை வர ஆரம்பித்து விடும்.

ஒவ்வொரு வாரமும் பிரிட்ஜை சுத்தப்படுத்துங்கள். காய்கறிகள் அழுகி இருந்தால் நீக்குங்கள். காய்கறிகளை காய்கறி கூடையில் ஒரு துணி விரித்து போடுங்கள். இது காய்கறிகள் அழுகி போகாமல் இருக்க உதவும். உணவுக்கு ஒரு தட்டு, தோசைமாவு, பால் ஒரு தட்டு என்று தனித்தனியாக பிரித்து வையுங்கள்.

​பூ மற்றும் பழங்கள்

samayam tamil

மல்லிகைப் பூ, வாசனை பூக்களை பிரிட்ஜ்யில் வைத்தால் ஒரு கவர் போட்டு அதை ஒரு டப்பாவில் வைத்து பிரிட்ஜ்யில் வையுங்கள். இல்லையென்றால் உணவுப் பொருட்கள் எல்லாம் பூ வாசம் வீச ஆரம்பித்து சாப்பிட முடியாமல் போய் விடும்.

பழங்களை ஒரு கூடையில் வைத்து காற்றோட்டமாக மூடாமல் வையுங்கள். மூடினால் சிக்கிரமே பூஞ்சை வர ஆரம்பித்து விடும். வெப்பநிலையை சரியான நிலையில் வையுங்கள் இல்லையென்றால் நுண்ணுயிர் பெருக்கத்தை உண்டாக்கும். உணவை உள்ளே சூடாக வைக்காதீர்கள். இதுவும் துர்நாற்றம் வீச காரணமாகிறது. மேலும் உடம்பிற்கு கேடை விளைவிக்கும். வெப்பநிலையை 4 முதல் 5 டிகிரி வரை (37-40 டிகிரி பாரன்ஹீட்) வைத்திருங்கள்.இப்பொழுது பிரிட்ஜ் துர்நாற்றத்தை நீக்கும் பொருட்களை பற்றி பார்க்கலாம்.

​பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

samayam tamil

பிரிட்ஜ் துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா ஒரு சிறந்த ஒன்றாக உள்ளது. இதிலுள்ள துர்நாற்றம் நீக்கும் தன்மை பிரிட்ஜ்யில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி வெளியேற்றுகிறது. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பிரிட்ஜ்யின் தட்டுகளை சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் ஒரு பெளலில் பேக்கிங் சோடாவை உள்ளே வைத்து பிரிட்ஜ்யை மூடி விடுங்கள். 24 மணி நேரம் அப்படியே வைத்திருங்கள். இது பிரிட்ஜ்யில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி விடும். பிறகு மறுபடி புதியதாக மாற்றுங்கள். சாதாரண வொயிட் வினிகர் பிரிட்ஜில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. ஒரு கப் வொயிட் வினிகரை பிரிட்ஜ் ஜில் 24 மணி நேரம் வைத்து இருங்கள். பிரிட்ஜ் துர்நாற்றத்தை உறிஞ்சி விடும்.

​காபி மற்றும் லெமன்

samayam tamil

காபியும் நம்மளுக்கு சிறந்த நறுமணத்தை தரக் கூடியது. எனவே உங்க பிரிட்ஜ் துர்நாற்றத்தை நீக்க காபி பொடியை பயன்படுத்தலாம் இதுவும் துர்நாற்றத்தை உறிஞ்சக் கூடிய சக்தி கொண்டது.

சிட்ரஸ் அமிலம் பிரிட்ஜிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியான நறுமணத்தை கொடுக்கும். எனவே காட்டன் பஞ்சை எடுத்து அதை லெமன் ஜூஸில் நனைத்து பிரிட்ஜ் தட்டுகளை துடையுங்கள். பிரிட்ஜ் துர்நாற்றம் போவதோடு உங்க பிரிட்ஜ் பளபளப்பாக இருக்கும். சில லெமன் துண்டுகளை பிரிட்ஜில் போட்டு வையுங்கள். அதே மாதிரி அடிக்கடி மாற்றி கொள்ளுங்கள்.

​ஆக்டிவேட்டடு கரித்தூள்

samayam tamil

செயலாக்கப்பட்ட கரித்தூளிலும் ஒரு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. எனவே பிரிட்ஜ் துர்நாற்றத்தை போக்க கரியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று நாட்களுக்கு உள்ளே வைக்கவும். வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். இப்படி செய்யும் துர்நாற்றத்தை எல்லாம் கரி உறிஞ்சி விடுகிறது.

விறகு அடுப்பெல்லாம் யாரு பயன்படுத்துறா, கரித்துண்டுக்கு நாங்க எங்க போறதுனு நீங்க கேட்கலாம்.

​வெளியூருக்கு செல்லும் போது…

samayam tamil

நிறைய பேர் ஊருக்கு செல்லும் போது பிரிட்ஜை க்ளீன் பண்ண சேம்பேறித்தனம் பட்டு அப்படியே காய்கறிகள், பழங்கள், உணவுகளை விட்டு செல்வார்கள். 2 நாட்கள் தானே கெடாமல் இருக்கும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள், நீங்க இல்லாத சமயங்களில் நீண்ட நேரம் பவர் கட் இருந்து இருக்கலாம். பிறகு திரும்பி வரும் போது அந்த உணவை சாப்பிடுவது பாதுகாப்பானதா? பவர் கட் ஏற்பட்டுள்ளதா என்பதை எப்படி கண்டறிவது. இதோ அதற்கான ஒரு எளிய ட்ரிக் இங்கே. ஒரு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அதை உறைவிப்பான் (பீரீசர் தட்டில்) வைக்கவும். நன்றாக உறைந்த பிறகு அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்து விடுங்கள்.

வெளியூருக்கு சென்று நீண்ட நாட்கள் கழித்து திரும்பும் போது அந்த நாணயம் அதே இடத்தில் இருந்தால் பவர் கட் ஆக வில்லை. உணவுப் பொருட்களும் கெட வில்லை என்று அர்த்தம். அதுவே அடிப்பகுதியில் சென்று உறைந்து போய் இருந்தால் நீண்ட நேரம் பவர் கட் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து விடலாம்.

பிறகு உங்க உணவுப் பொருட்களை உடனடியாக சூடு செய்தோ இல்லை வேண்டாம் என்று தவிர்த்தோ விடலாம்.

பிரிட்ஜை வைத்த உங்க உணவு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை எப்பொழுதும் பார்த்து விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆரோக்கிய கேடுக்கு வழி வகுக்கும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.