மத்திய மாகாண ஆளுநரின் செயலால் மக்கள் வரி பணத்தில் பெற்றுக் கொண்ட உலர் உணவு பொருட்கள் மக்களுக்கு வழங்குவதில் தடை, பொது மக்கள் விசனம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் வாழும் பொது மக்கள் உட்பட மலையக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.இதில் ஏனைய மக்களை விட மலையக பிரதேசங்களில் பல மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக இம் மக்களுக்கு கிழமைக்கு இரண்டு மூன்று நாட்களே வேலை வழங்கப்பட்டன.

இந்நிலை இவர்களுக்கு சம்பளம் இல்லாததன் காரணமாக தங்களுடைய குடும்ப செலவுகளை அதாவது அத்தியவசிய பொருட்களை கூட கொள்வனவு செய்ய முடியாது மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர். மக்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு மக்களிடம் இருந்து அறிவிடப்பட்ட வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அத்திவசிய பொருட்களையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் . என்ற நல்லெண்ணத்துடன் தீர்மானம் ஒன்றினை எடுத்து சகல அங்கத்தவர்களின் அனுமதியுடன் சுமார் 24 லட்சம் ரூபாவுக்கு அரிசி,பருப்பு, வெங்காயம், வெள்ளைபூடு, தேங்காய், கோதுமை மா உட்பட பல அத்தியசிய பொருட்களை கொள்வனவு செய்து அதனை வழங்குவதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு அறிவித்த போது இதனை இலவசமாக வழங்க வேண்டாம் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்ததனையடுத்து அப்பொருட்கள் கடந்த 25 திகதி முதல் நுவரெலியா பிரதேசசபையிலேயே தேங்கியுள்ளன.

தற்போது இப் பொருட்கள் அழிவடைந்து வரும் நிலையிலும் சபை தவைர் உட்பட அங்கத்தவர்கள் அனுமதிக்க காத்திருக்கின்றனர். பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர் களிடமிருந்து பணத்தினை பெற்று உலர் உணவு பொருட்களை பெற்றுக்கொடுப்பது முடியாத காரியமாக காணப்படுவதனால் இவற்றினை இலவசமாக வழங்க வேண்டும் . இல்லா விட்டால் எவருக்கும் பயன்படாத நிலையில் அனைத்தும் பொருட்களும் வீணாகக்கூடிய நிலை காணப்படுவதனால் உரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கோரிக்கை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.