கண்ணை மறைக்கும் புகழ் போதை.. முதல் வாய்ப்பு கொடுத்தவரையே மறந்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக மாறிவிட்டார். அவரது நடிப்பில் வரும் பெரும்பாலான படங்கள் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தொகுப்பாளராக பணியாற்றி மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். முதன் முதலில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார், ஆனால் அதற்கு முன்பே ஒரு படத்தில் அறிமுகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகளைக் கிளப்பிய நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அடிப்படையில் நடிகையும் ஒரு இயக்குனரும் ஆவார்.
இவரது இயக்கத்தில் என் குறள் 786 எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தவர்தான் சிவகார்த்திகேயன். அந்த படத்தின் பணிக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் இரண்டு வருடம் பணியாற்றினாராம். ஆனால் அதன்பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் யார் என எனக்கு தெரியாது என்று சிவகார்த்திகேயன் கூறியதாக அவர் மீது புகார் எழுந்தது.
சிவகார்த்திகேயனுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நேரடியாக பிரச்சனை வந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தில் அமைதி காத்ததால் அந்த விஷயம் அப்போது பெரிதாக பேசப்படவில்லை.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவருக்கு முதலில் வாய்ப்பு தர இருந்த என்னை, யார் என்றே தெரியாது என்று கூறியது தனக்கு வருத்தம் அளிக்கிறது எனவும் சோகத்துடன் கூறியுள்ளார்.
தான் வளர்ந்து வந்த பாதையை மறக்காத சிவகார்த்திகேயன் இப்படி செய்தாரா? அல்லது லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுமென்றே சிவாவின் மீது புகார் சுமத்துகிறாரா என சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கோபம் கொண்ட கொந்தளித்து உள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை