மாவை சேனாதிராசா மற்றும் அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நிதி உதவியில் பல குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வாங்கிவைப்பு.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவருமாகிய திரு. மாவை சேனாதிராசா அவர்களின் நிதியுதவியிலும் , புதிய சுதந்திரன் மற்றும் தமிழ் CNN ஊடக நிர்வாக பணிப்பாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நிதியுதவியிலும் யாழ் . ஊரெழு இருபத்தைந்து வீட்டுதிட்ட பகுதியில் வாழ்கின்ற 25 குடும்பங்களுக்கும் , ஊரெழு கணேச வித்தியாலத்தினை அண்டிய பகுதியில் வாழ்கின்ற 6 குடும்பங்களுக்கும் , திருநெல்வேலி வடக்கு கலாசாலை வீதியில் வசிக்கின்ற 2 குடும்பங்களுக்கும் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களால் உலருணவு பொருட்கள் கையளிக்கப்பட்டன .
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் கனாதீபன் அவர்களும் இச்செயற்பாட்டில் கலந்துகொண்டிருந்தார் . இப்பணியை முன்னெடுப்பதற்கான வாகன உதவியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு . ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் வழங்கி இருந்தார்.
கருத்துக்களேதுமில்லை