கிழக்கு மாகாண ஆளுநரின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமனம்!
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், அநுராதபுரம் – ஹொரவப்பத்தானவின் உதவிச் செயலாளராகவும், அநுராதபுரத்தின் கூடுதல் அரசாங்க முகவராகவும், மாத்தளை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் இளங்கலை பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை