கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து, வெளிநாட்டு கப்பல்களில் தொழில் புரிந்து வந்த சிவில் சேவை உத்தியோகத்தர்கள் 236 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை விசேட விமானம் ஒன்றின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு உலகமே முகம் கொடுத்துள்ள நிலையில், ஒவ்வொரு நாடும், வெளிநாடுகளில் பணிபுரியும், கல்வி பயிலும் தங்களது குடிமக்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையும் வெளிநாடுகளிலுள்ள தங்களது மக்களை அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை