யாழில் தனிமைப்படுத்தப்பட்ட13 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு..

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநொயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட 13 பேருடைய மாதிரிகளும் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

குறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, பரிசோதனைகளின் முடிவுகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் பரிசோதனையின் முடிவுகள் எவையும் வெளியிடப்படாத நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.