அலறி எழுதிய “துளி அல்லது துகள்” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!

 (அபு ஹின்ஸா, ஐ.எல்.எம். நாஸீம்,ஏ.எல்.எம். சினாஸ், என்.என்.எம். அப்ராஸ், றாஸிக் நபாயிஸ்  )

 

கவிஞர், சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) எழுதிய துளி அல்லது துகள் கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின் தவிசாளர் நூருல் ஹுதா உமரின் நெறியாள்கையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் எம்.எம்.எம். நூருல் ஹக் அரங்கில் இன்று (30)காலை நடைபெற்றது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், நாடறிந்த சுழலியலாருமான சிறுகதை எழுத்தாளர் (அம்ரிதா ஏயெம்) ஏ.எம். றியாஸ் அகமடின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் இலக்கிய விமர்சகருமான வஸீர் சேகுதாவூத் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். நூலின் பதிப்புரையை பேஜஸ் புத்தக நிலைய நிறுவுனரும், பிரபல இலக்கிய ஆர்வலருமான, கவிஞர், அரசியல் செயற்பாட்டாளர் சிராஜ் மஸூரும், நூல் தொடர்பிலான கருத்துரையை சிறுகதை எழுத்தாளர்,விமர்சகர் உமா வரதராஜன் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர், இலக்கிய விமர்சகர், கவிஞர் மன்சூர் ஏ காதிர் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்த நூலின் சமர்ப்பண பிரதிகளை மர்ஹூம் கவிஞர் அறநிலா குடும்பத்தின் சார்பில் அவரது மகளும், மருதூர் கோத்தனின் மகன் மர்ஹூம் கவிஞர் சட்டத்தரணி எம்.ஐ.எம். ரவூப் குடும்பத்தின் சார்பில் அவரது மகனும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பிரபல மூத்த இலக்கியவாதிகள், இளம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.