காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தீவிர அவதானத்துடன் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை