ராஜபக்ஷவின் வெற்றிக்காக தலைமை தாங்கியமை தவறு என்றால் மன்னிப்புக்கோர தயார் – விமல் வீரவன்ச
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பாக, மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீர்கொழும்பில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரி வித்த அவர், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெற்ற பேரணிக்கு தன தலைமை தங்கியதாக குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே தான் இதனை கூயதாகவும் மாறாக மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்திலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக பேசவில்லை என்றும் விமல் வீரவன்ச கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைவராக செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கட்சியில் உயர் பதவி ஒன்றை வழங்கினால் தற்போதைய அரசியல் பலம் மேலும் வலுவடையக்கூடும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை