தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

தனியார் வைத்தியசாலைகளின் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பூசிகளை வழங்கப்பட்டு வருவதாக, ஆரம்ப சுகாதாரச் சேவைகள் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டுப் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றக்கூடிய, பிரதேச மட்டங்களில் உள்ள சிறிய அளவிலான சுகாதார மத்திய நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் கொவிட் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.