கொரோனா உயிரிழப்பு 400 ஐத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியுள்ளது.

இறுதியாக 6 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில், நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 ஆண்களும், ஒரு பெண்ணுமே இறுதியாக உயிரிழந்துள்ளோர் பட்டியலில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

பல்லேதலவின்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் ஹங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

ஹுன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.