யாழ்.பல்கலையின் உயரிய துரைராஜா விருதினை பெறுகிறார் மாணவன் சிறீ!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் யாழ்.பல்கலைக்கழகத்தின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு யாழ் பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருது வழங்கப்படுவது வழக்கமாகும்.
அதனடிப்படையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ் பல்கலையின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் துரைராஜா விருது துணைவேந்தரால் வழங்கப்படும்.
முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலிருந்து பல்கலைக்கு தெரிவாகி ஊடகக்கற்கைகள் துறையில் சிறப்புக்கலைமாணி பட்டத்தை பெற்று வெளியேறவுள்ள யேசுரட்ணம் சிறீ என்ற மாணவனுக்கே இந்த ஆண்டுக்கான குறித்த விருதினை வழங்க யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விருதினை பெற்றுக்கொள்வதற்காக 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறித்த மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14
கருத்துக்களேதுமில்லை