பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகத்தினால் கௌரவிப்பு
(நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் இன்று உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) கலை,கலாச்சார பீட அரங்கில் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பதிவாளர் ஏ.எச். அப்துல் சத்தார், பிரதிப்பதிவாளர்கள், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், நிதியாளர், நூலகர், உட்பட விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பாராட்டுவிழாவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பற்றிய சிறப்புரையை தமிழ்த்துறை தலைவர் தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார். மேலும் துறைத்தலைவர்கள் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பொன்னாடை போற்றி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் போட்டிக்கு விண்ணப்பித்த பதினோரு பேரில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG-20210224-WA0013.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.11.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210224_104307.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG-20210224-WA0013.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.04.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.07.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.08.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.09-1.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.09.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/WhatsApp-Image-2021-02-24-at-12.48.11.jpeg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210224_105304.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210224_104307.jpg)
கருத்துக்களேதுமில்லை