சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புண்ர்வு செயலமர்வு
சமுர்த்தி செளபாக்கியா வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புண்ர்வு செயலமர்வு (19) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பாலியல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு வைத்தியர் என்.எம். தில்சாத், கணக்கு பரிசோதகர் இஸட். ஏ.றகுமான், சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல்.ஏ. ஜுனைதா, எஸ்.றிபாயா, ஏ.எம்.ஏ.கபூர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் கலாநிதி ஏ. எம்.எம். றியாத் உள்ளிட்ட சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
போதைப் பொருள் பாவனையும் அதன் பாதிப்புக்களும் தொடர்பான விரிவுரையினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பாலியல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு வைத்தியர் என்.எம். தில்சாத் நிகழ்த்தினார்
கருத்துக்களேதுமில்லை