தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிழக்கு மாகாணத்திற்கான செயற்குழுக் கூட்டம்…
(சுமன்)
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிழக்கு மாகாணத்திற்கான செயற்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடலொன்று இன்றைய தினம் கல்லடியில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் க.ஜெயப்பிரகாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் கணபதிப்பிள்ளை யோகராஜா, பொருளாளர் வ.சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மாநகரசபை உறுப்பினர் வ.குபேரன் உட்பட கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், தமிழர் விடுதலைக் கூட்டணி புனரமைப்பு, கிழக்கு மாகாணத்திற்கான நிருவாக அலகுகளைப் புனரமைத்தல், மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்;சனைகள் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை