நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றிரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி வடக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை பெற தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை