இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில்…..
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிப் பகுதியில் 10/04 ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கைதடி சரஸ்வதி சனசமூக நிலையப் பகுதியைச் சேர்ந்த 32வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை