உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிநிலைநாட்டுவது குறித்து எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது உரிய விசாரணைகள் மூலம் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி தனது உயிர்த்தஞாயிறு தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதலிலின் துயரமான அனுபவங்கள் இன்றும் எங்கள் மனதில் எதிரொலித்தவண்ணம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.