புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு – அமெரிக்கா தெரிவித்திருப்பது என்ன?

புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு – அமெரிக்கா தெரிவித்திருப்பது என்ன?
புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.
ரணில்விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்துசெயற்படுவது குறித்து எதிர்பார்த்திருக்கின்றோம்
அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையும்,அனைவரையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை உருவாக்குவதும் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான ஸ்திரதன்மையை ஊக்குவிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளாகும்.
சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிலும்,இலங்கையர்களிற்கு அவசியமான நீண்டகால தீர்வுகளிலும் அர்த்தபூர்வமான முன்னேற்றங்களை நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.